Written By learn computer on Tuesday, 20 March 2012 | 11:22

நான்கு கால்கள் மூன்று கைகளுடன் அதிசய சிறுவன்

இந்தியாவில் பிறந்த இந்த சிறுவனுடைய இந்த குறையை நீக்க ஆயிரம் பவுண்ட் இங்கிலாந்து பணம் தேவைப்படுகிறதாம் இந்த குறைபாட்டை மனித ஓட்டுண்ணி என்று அழைக்கப்படுகிறது




இந்தியாவில் பிறந்த இந்த சிறுவனுடைய இந்த குறையை நீக்க ஆயிரம் பவுண்ட் இங்கிலாந்து பணம் தேவைப்படுகிறதாம் இந்த குறைபாட்டை மனித ஓட்டுண்ணி என்று அழைக்கப்படுகிறது.





மக்கள் மனங்கவர் தலைவர்.

வடகொரியாவை ஆட்சி செய்து வந்த அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. வடகொரியா உருவான போது ஆட்சி பொறுப்பேற்றவர் கிம் இல் சங். அவருக்கு பின், 1994ல் அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சி பொறுப்பேற்றார். அது முதல் 17 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், அரசுக்கும் தலைமை பொறுப்பேற்று,  ஆட்சி நடத்தி வந்தார்.


 உலகில் அதிக ராணுவ படைகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உருவாக்கினார். கடந்த 2003ல் சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 2005ல் தங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அவர் மிரட்டினார். இதன் மூலம், உலக நாடுகளிடம் கடும் எதிர்ப்பை சந்தித்தார். ஆனால் வட கொரிய மக்களால் மிகவும் மதிக்க-விரும்பப்பட்ட தலைவராக இருந்தார் கிம் ஜாங்.
கடந்த 2008ல் கிம் ஜாங்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது முதல் அவர் இருதய நோயாலும், நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த 17ம் தேதி மரணமடைந்தார். எனினும், அந்நாட்டு அரசு நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கிம் ஜாங்கின் 3வது மகன் ஜாங் அன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 



_________________________________________________________________________________________________________
ஓயாத இணையம்

அயனாவரம், எஸ்பிஐ காலனியை சேர்ந்தவர் யாதிக் அகமது. தோல்வியாபாரி (50). இவரது மகன் முகமது உமர்செரிப் (22). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. எலக்டரானிக் இன்ஜினியரிங் படிக்கிறார். இரவு பகல் பாராமல் எப்பொழுதும் இணையதளத்திலேயே மூழ்கிக்கிடப்பார். இதனால் 15 பாடங்களில் தோல்வியடைந்தார். இந்நிலையில் உமர் செரிப், ஜனாதிபதிக்கு 36 முறை இமெயில் மூலம் புகார் அனுப்பினார்.


அதில், ‘‘நான் இ மெயிலுக்கு அடிமையாகிவிட்டேன். அதனால் என்னுடைய ஞாபகசக்தி முழுவதும் இழந்துவிட்டது. இதனால் கல்லூரியில் சரியாக படிக்க முடியவில்லை. என்னை காப்பாற்றுங்கள் கூறியிருந்தார்.  36 முறை இமெயிலில் புகார் வந்ததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சருக்கு உத்தரவுவந்தது. 

அதை தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த வாலிபரை விசாரித்து முகமது உமர்செரிப்பை மனோதத்துவ சிகிச்சைபெற அழைத்து செல்லும்படி அவரது பெற்றோரிடம் கூறினர்.
________________________________________________________________________________
வாழைப்பழ விவகாரம்.. 
அதாங்க இது.வாழைப்பழம் சாப்பிட்டால் எடைகூடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஒருஆய்வில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பர், துத்தநாக ஆக்ஸைடு, ஸ்ட்டியரிக் அமிலம் போன்றவையாகும். டயர்களை எரித்தால் - அது வளிமண்டலம் மற்றும் நிலத்தடி நீரையும் நச்சாக்கும் நச்சு வாயுக்களை வெளியிடும். உற்பத்தியாளர்கள் இப்போது அதிகமாக நீடிக்கக்கூடிய மற்றும் மறு சுழற்சிபொருட்கள்,நச்சுத்தன்மையற்றடயர்கள் தயாரிப்பது பரிசோதித்து வருகின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெற்று வளி,நீர் நிலைகள் மற்றும் நம்மையும் காப்பாற்ற வேண்டும். ________________________________________________________________________

கழிவு டயர்களும் சிற்பங்களாகலாம்.

கீழே காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் வீசி எறியப்பட்ட கழிவு டயர்களால்.உருவானது.












இப்போது கழிவு டயர்கள் பற்றி சிறிது பார்ப்போமா?
ஆண்டுதோறும்1 பில்லியன் டயர்கள் செயற்கை ரப்பர், இயற்கை ரப்பர், கார்பன் , பாலியஸ்டர் இழைகள், மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு,  உற்பத்தி செய்யப்படுகின்றன, டயர்கள் பல்வேறுசூழல்களிலும் உழைத்திட டயர்கள் 28 % இயற்கை ரப்பர், 28 % செயற்கை ரப்பர் (கச்சா எண்ணெய் இருந்து தயாரிக்கப்படுகிறது), மற்றும் 28 சதவீதம் கார்பன்கள் பயன்படுத்தி தரமான டயர்கள் செய்யப்படுகிறது. 
முதல் 84%போக மீதி 16 %டயரை மென்மையாக்கும் (ஹைட்ரோகார்பன் எண்ணெய், ரெசின்கள்), Antidegradants (பாரா-phenylenediamine, பாராஃப்பின்), Curatives சல்பர், துத்தநாக ஆக்ஸைடு, ஸ்ட்டியரிக் அமிலம் போன்றவையாகும்.
டயர்களை எரித்தால் - அது வளிமண்டலம் மற்றும் நிலத்தடி நீரையும் நச்சாக்கும் நச்சு வாயுக்களை வெளியிடும். உற்பத்தியாளர்கள் இப்போது அதிகமாக நீடிக்கக்கூடிய மற்றும் மறு சுழற்சிபொருட்கள்,நச்சுத்தன்மையற்றடயர்கள் தயாரிப்பது பரிசோதித்து வருகின்றனர்.
அதில் அவர்கள் வெற்றி பெற்று வளி,நீர் நிலைகள் மற்றும் நம்மையும் காப்பாற்ற வேண்டும்.
________________________________________________________________________

Written By learn computer on Thursday, 15 March 2012 | 18:43

WWW.JEYAKANTHKANANI.TK

Saturday, April 23, 2011

அடோப் ரீடர் தானே படித்து காட்ட

நாம் பெரும்பாலானவர்கள் பி.டி.எப். பைல்களை

அடோப் ரீடர் மூலம் திறந்து பார்ப்போம். ஆனால்

அந்த அடோப் ரீடரிலேயே படிக்கும் வசதி இருப்பது

பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நம்மிடம்

உள்ள கட்டுரைகள், பாடங்கள், டாக்குமென்டுகள் என

பி.டி.எப். பைல்களாக எது எது உள்ளனவோ அது

அனைத்தையும் அடோப் ரீடர் படித்துக்காட்டும்.

பள்ளி , கல்லூரி படிக்கும் மாணவர்கள் இந்த

வசதியை பயன் படுத்துவது மூலம் பாடங்கள்

எளிதில் மனப்பாடம் ஆகும்.தூய தமிழில் பேசுவது

போல் தூய ஆங்கிலத்தில் அடோப் ரீடர் பேசுவதை

நாம் கேட்கலாம். இனிஇந்த வசதியை எப்படி

பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் நீங்கள் படித்துக்காட்டவேண்டிய

பைலை ஓப்பன் செய்துக்கொள்ளவும். பிறகு

அதில் view எனும் காலத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு ஒரு காலம்

தோன்றும்.

அந்த காலத்தில் கடைசியில் உள்ள Read Out Loud

ஐ செலக்ட் செய்யவும். பின்னர் வரும் உப காலத்தில்

Activate Read Out Loud அல்லது Shift+Ctrl+Y அழுத்தவும்.

இப்போழுது உங்களுக்கு கீழ்கண்ட வாறு காலம்

மீண்டும் திறக்கும்.


அதில் நீங்கள் தேர்வு செய்த பக்கம் மட்டும் படித்துக்

காட்ட வேண்டுமா அல்லது மொத்த பக்கங்களையும்

படித்து காட்ட வேண்டுமா என உங்கள் விருப்பத்திற்கு

ஏற்ற வாறு தேர்வு செய்யுங்கள்.



தேர்வு செய்து முடித்ததும் அடோப்ரீடர் உங்களுக்கு

நீங்கள் தேர்வு செய்த பக்கத்தை படித்துக்காட்ட

ஆரம்பிக்கும். படிப்பதை தற்காலிகமாகநிறுத்தவோ

அல்லது நிறந்தராமாக நிறுத்தவோ முடியும்.

அறிவு வளர….

போட்டிகள் மிகுந்து வரும் அவசரமான உலகில் போராடி முன்னேறும் வழிகளை தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே சிறு குழந்தைகள் கூட மூட்டையை தூக்கிச் செல்வதை போல புத்தக சுமையை தூக்குகின்ற நிலை. முன்பு ஐந்தாம் வயதில் தான் பள்ளிக்கல்வி தொடங்கியது. அதுவரை பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பில் இருந்துகொண்டு அம்மா, அப்பா என சொற்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தாய் தான் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று பிறந்த சில மாதங்களிலே கல்வி நிலையங்களில் முன்பதிவு. மூன்றாம் வயதில் பாலர் பள்ளி வகுப்பு. நான்காம் வயதில் எல்கேஜி எனப்படும் மழலையர் கீழ்வகுப்பு. ஐந்தாம் வயதில் யுகேஜி எனப்படும் மழலையர் மேல்வகுப்பு. இவற்றிலிருந்து பயிற்சி பெறாவிட்டால், ஒன்றாம் வகுப்பில் இடமில்லை என்று சொல்லுமளவுக்கு இன்றைய காலம் மாறிவிட்டது. தொட்டிலில் தாலாட்டப்பட்டு தாய் வழிக்கல்வி ஊட்டப்பட வேண்டிய வயதில், நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாமல், பத்தோடு பதினொன்றாய் வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும் நிலை தொடர்கிறது.பாலர் பள்ளி வகுப்புக்கு செல்லும்போதே தனது குழந்தை படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அடையும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பேசி பழகுவதற்கு முன்னரே வண்ணப்படங்கள், அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கின்றனர். இதுபோல தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் கையாளும் முறைகளில் ஒன்று தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க பழக்கப்படுத்துவது. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகள் பேச பழகுவதோடு, அறிவுக்கூர்மையும் பெறுவர் என்று பலர் எண்ணுகின்றனர். புற்றீசல்போல் புதிதாக முளைத்துவரும் தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவருவது ஒருபுறம். அதிலும் குறிப்பாக கல்வி தொலைக்காட்சியையோ, கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ குழந்தைகள் பார்ப்பதால் அறிவுக்கூர்மை அடைவர் என்ற அசையாத நம்பிக்கை பெற்றோர் பலரிடம் உள்ளது. இதற்காக குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கின்றனர். ஆனால் கல்வி தொலைக்காட்சியை குழந்தைகள் குறிப்பாக பிறந்த முதல் இரண்டு ஆண்டுககால மழலைப் பருவத்தில் பார்ப்பதால் நன்மை கிடைக்குமா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. தொலைக்காட்சி பார்ப்பதால் அறிவு வளரும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரின் மூளை வளர்ச்சிக்கு கல்வி தொலைக்காட்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ உதவவில்லை என்று இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா
இதனை அழுத்துக
http://247vipclub.com/pages/index.php?refid=hmfasmi


Written By learn computer on Wednesday, 14 March 2012 | 22:52

எச்சரிக்கை: கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்கள்

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.
வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும், பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர். மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.
ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம்.
ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை. மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர். வேலைக்காக விண்ணப்பித்தவ‌ர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி, புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான். இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம்.
கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவ‌லாகி வருகிறது. இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும். பேஸ்புக்கில் பகிர்ந்தவை, வலைப்பதிவில் உள்ளவை, வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை, இணைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்த‌வை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம்.
அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம், பாதகமானவையும் இருக்கலாம். உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம். இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் பட்சத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும். உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரக்கூடும் அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.
எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம். ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைத்தாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிற‌து. இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது. இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதாவது இந்த தள‌த்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடம், உங்கள் கல்வித்தத்குதி போன்ற விவரங்களை பதிவேற்றலாம். அதன் பிறகு கூகுலில் உங்களைப்பற்றி தேடும் போது இந்த பெட்டியே முதலில் வரும். அது சரியான அறிமுகத்தை தரும். ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. சிந்தனைதாகம் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger